இந்தியா

“இது ஆணாதிக்க மனோ நிலை.. பெண்களுக்கு இரு விரல் சோதனை கூடாது” : வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவிரல் சோதனை நடத்தும் முறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“இது ஆணாதிக்க மனோ நிலை.. பெண்களுக்கு இரு விரல் சோதனை கூடாது” : வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்தவகையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவிரல் சோதனை நடத்தும் முறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம் பெண் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரு விரல் சோதனை நடத்தக் கூடாது.

“இது ஆணாதிக்க மனோ நிலை.. பெண்களுக்கு இரு விரல் சோதனை கூடாது” : வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

இதனை உறுதி செய்ய அனைத்து மாநில காவல்துறை தலைவர்களும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான பயிலரங்குகளை நடத்த அறிவுறுத்த வேண்டும். பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக உள்ளது.

இது ஆணாதிக்க மனோ நிலைக்கு உட்பட்டது. இந்த சோதனைக்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதரமும் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அத்தகைய சோதனையை நடத்துவது மீண்டும் அந்த பெண்ணை துன்புறுத்துவதாகும் என்பதால் இந்த நடைமுறைக்கு தடைவிதிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“இது ஆணாதிக்க மனோ நிலை.. பெண்களுக்கு இரு விரல் சோதனை கூடாது” : வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

இரு விரல் பரிசோதனை என்பது பெண்ணுறுப்பிற்குள் இரு விரல் விட்டு பரிசோதிக்கும் முறையாகும். பெண்ணுறுப்பில் ’ஹைமன்’ என்ற சவ்வு இருக்கும். அந்த சவ்வு கிழிந்துள்ளதா, இல்லை கிழியாமல் இருக்கிறதா என்று இரு விரல்களை உள்விட்டு பார்க்கிறார்கள். இந்தப் பரிசோதனை முறை மிகவும் வலி தரக்கூடியது. சாமானிய மக்களில் இருந்து மருத்துவம் படித்த மேதைகள் வரையிலும் பெரும்பாலானோரிடமும் ஒரு பிற்போக்குத்தனம் குடிகொண்டுள்ளது.

அந்த சவ்வு இருந்தால் அந்தப் பெண் இதுவரை யாருடனும் உடலுறவு வைக்கவில்லை என்றும், அந்த சவ்வு இல்லையெனில் அப்பெண் இதற்கு முன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் புரிந்துகொள்ளும்படியான பொதுபுத்தி இங்கு பலரிடம் உள்ளது. இதை மருத்துவர்களில் ஒரு தரப்பினரும் நம்புகிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories