இந்தியா

ம.பி :பழங்குடி சிறுவனை கயிறு கட்டி கிணற்றில் தொங்கவிட்ட கும்பல்.. வீடியோ எடுத்த சிறுவனை மிரட்டிய போலிஸ்!

செல்போன் திருடியதாக பழங்குடி சிறுவனை கயிறு கட்டி கிணற்றில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி :பழங்குடி சிறுவனை கயிறு கட்டி கிணற்றில் தொங்கவிட்ட கும்பல்.. வீடியோ எடுத்த சிறுவனை மிரட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டல் உள்ள உட்கோஹா என்னும் கிராமத்தில் 9 வயது பழங்குடியின சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த நிலையில், அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவரின் செல்போன் காணாமல் போயுள்ளது.

அதைத் தொடர்ந்து அந்த பழங்குடியின சிறுவன்தான் செல்போனை திருடியிருப்பான் என கருதிய அந்த பகுதியை சேர்ந்த சிலர் சிறுவனை கிணறு ஒன்றிற்குள் கயிறு கட்டி தொங்க விட்டுள்ளனர். மேலும் தண்ணீருக்குள் தூக்கி எறிந்து விடுவதாக மிரட்டியும் உள்ளனர்.

ம.பி :பழங்குடி சிறுவனை கயிறு கட்டி கிணற்றில் தொங்கவிட்ட கும்பல்.. வீடியோ எடுத்த சிறுவனை மிரட்டிய போலிஸ்!

சிறுவன் கிணற்றில் தொங்கவிடப்பட்ட சம்பவத்தை அந்த சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு சிறுவன் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட அஜித் ராஜ்புத் என்ற இளைஞர் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுவனை போலிஸார் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று போலிஸார் தன்னை மிரட்டியதாக அந்த சிறுவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories