இந்தியா

இப்போது அல்ல, 2019-ல் மோடி தொடங்கிவைத்த போதே விபத்தான 'வந்தே பாரத்' ரயில்- வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி 'வந்தே பாரத்' ரயில் சேவையை தொடங்கிவைத்த அடுத்தநாளே வந்தே பாரத் ரயில் பழுதாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது

இப்போது அல்ல, 2019-ல் மோடி தொடங்கிவைத்த போதே விபத்தான 'வந்தே பாரத்' ரயில்- வெளிவந்த அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்தார்.

புதிதாகப் பரிசோதனை செய்யப்பட்ட 3-வது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி சாதனை படைத்தது. மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது 180 கி.மீ என்றும், முந்தைய ரயிலின் அதிகபட்ச வேகத்தை ஒப்பிடுகையில் இது 20 கி.மீ. கூடுதல் வேகம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்போது அல்ல, 2019-ல் மோடி தொடங்கிவைத்த போதே விபத்தான 'வந்தே பாரத்' ரயில்- வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது சில தினங்களுக்கு முன்னர் காலை 11.15 மணியளவில் மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் 4 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து எருமைகள் மோதியதில் ரயிலின் முன்பகுதி உடைந்து விழுந்தது காட்சி இணையத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து வந்தே பாரத் விரைவு ரயில் மீது மோதி சேதம் ஏற்படுத்திய விவகாரத்தில் எருமை மாடுகளில் உரிமையாளர்கள் மீது குஜராத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்பின்னர் அடுத்தநாளே குஜராத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து 433 கிமீ தொலைவில் உள்ள கஞ்சாரி மற்றும் ஆனந்த் நிலையங்களுக்கு இடையே மாலை 3.49 மணியளவில் தண்டவாளத்தை கடந்த பசுமாடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், பயணிகளுக்கு ஏதும் நிகழவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்போது அல்ல, 2019-ல் மோடி தொடங்கிவைத்த போதே விபத்தான 'வந்தே பாரத்' ரயில்- வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

இப்படி தொடர்ந்து இரு சம்பவங்கள் நடந்த நிலையில், இதற்கு அடுத்தநாளும் வந்தே பாரத் ரயிலில் கோளாறு ஏற்பட்டது. டெல்லி-வாரணாசி சென்ற ’வந்தே பாரத்’ ரயிலின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டதால் ரயில் 6 மணி நேரமாக உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்டத்தில் நிறுத்தபட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து வேறு ரயில் அனுப்பப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி 'வந்தே பாரத்' ரயில் சேவையை தொடங்கிவைத்த அடுத்தநாளே வந்தே பாரத் ரயில் பழுதாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. வாரணாசியில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்தபோது பிரேக் பழுதடைந்தது. கடைசி நான்கு பெட்டிகளில் இருந்தும் புகை கிளம்பி, அனைத்து பெட்டிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏதேனும் கால்நடையின் மீது இந்த ரயில் மோதியிருக்கலாம் என்று அப்போது இந்திய ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக BBC நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories