இந்தியா

நாயை காரில் கட்டி தெருவில் இழுத்துச்சென்ற மருத்துவர்..தடுத்து நிறுத்திய பொதுமக்கள்..அதிரடி காட்டிய போலிஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் வீட்டின் அருகில் சுற்றித்திரிந்த தெருநாயை காரில் கட்டி ரோட்டில் இழுத்துச்சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாயை காரில் கட்டி தெருவில் இழுத்துச்சென்ற மருத்துவர்..தடுத்து நிறுத்திய பொதுமக்கள்..அதிரடி காட்டிய போலிஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்னர் ஒரு தெரு நாள் சுற்றித்திரிந்துள்ளது. இதனால் அந்த நாயை அங்கிருந்து அப்புறபடுத்த மருத்துவர் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவதத்தன்று தனது காரில் தெருநாயை கயிற்றால் கட்டிய அவர், அதை சாலை வழியே காரில் வேகமாக இழுத்துச்சென்றுள்ளார். இதில், சிறுதுதூரம் ஓடிய நாய் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதனை தெரிவில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிலர் அந்த காரை நிறுத்தி அந்த நாய் அவிழ்த்துவிட்டுள்ளனர். அந்த நாய்க்கு கடும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், நாயை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், ரஜ்னீஷ் கால்வா என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாரை அழைத்து இந்த சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார் . மேலும், டாக் ஹோம் அறக்கட்டளை சார்பில் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories