இந்தியா

காவல்நிலையத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள்.. பாம்புகளை வைத்து தொல்லையை முடித்த போலிஸார்.. நடந்தது என்ன ?

காவல்நிலையத்தில் அட்டகாசம் செய்த குரங்குகளை, பாம்புகளை வைத்து சமாளித்த காவல்துறையினரின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

காவல்நிலையத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள்.. பாம்புகளை வைத்து தொல்லையை முடித்த போலிஸார்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள நெடும்கண்டத்தில் கேரள - தமிழ்நாடு எல்லையில் வனப்பகுதியை ஒட்டி கும்பம்மெட்டு காவல் நிலையம் அமைந்துள்ளது. சுற்றிலும் இருக்கும் குரங்குகள் இந்த காவல் நிலையத்தில் அடிக்கடி நுழைந்து பெரும் தொல்லை கொடுத்து வந்தன.

குரங்கு தொல்லையை சமாளிக்க போலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் குரங்கு தொல்லை குறைவதாக இல்லை. நாளுக்கு நாளுக்கு குரங்கு தொல்லை அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி உள்ளூர் எஸ்டேட் பராமரிப்பாளர் ஒருவரிடம் யோசனை கேட்டுள்ளனர்.

காவல்நிலையத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள்.. பாம்புகளை வைத்து தொல்லையை முடித்த போலிஸார்.. நடந்தது என்ன ?

விலங்குகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்தவறான அந்த நபரும் இவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டு ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி குரங்குகள் எப்போதுமே பாம்புகளை கண்டு அஞ்சும் தன்மை கொண்டது. பாம்பு செல்லும் வழியில் எந்த குரங்கும் வராது. ஆகவே பாம்பு பொம்மைகளை வாங்கி காவல்நிலையம் இருக்கும் பகுதியை சுற்றி கட்டுமாறு கூறியுள்ளார்.

அதன்படி போலிஸாரும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரப்பர் பாம்புகளை வாங்கி காவல்நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கட்டியுள்ளனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் காவல்நிலைய பகுதிகளில் குரங்குகள் வருவது நின்றுவிட்டதாக போலிஸார் தரப்பின் தெரிவிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories