இந்தியா

'பேசியது போதும்'.. அசாம் முதல்வர் பேசும் போது மைக்கை பிடித்து இழுத்த நபர்: வைரல் வீடியோ!

தெலங்கானாவில் அசாம் மாநில முதல்வர் பேசும் போது மர்ம நபர் ஒருவர் மைக்கை பிடித்து இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பேசியது போதும்'.. அசாம் முதல்வர் பேசும் போது மைக்கை பிடித்து இழுத்த நபர்: வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வந்திருந்தார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு வந்த ஒருவர் மைக்கை பிடித்து இழுத்து அசாம் முதல்வரை பேச விடாமல் தடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த தொண்டர்கள் அந்த நபரை பிடித்து இழுத்து சென்றனர். இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் டி.ஆர்.எஸ் கட்சிக் கொடியை அணிந்திருந்தார். இதனால் அது டி.ஆர்.எஸ் கட்சியின் சதிதிட்டம் என பா.ஜ.க குற்றம்சாட்டி உள்ளது.

'பேசியது போதும்'.. அசாம் முதல்வர் பேசும் போது மைக்கை பிடித்து இழுத்த நபர்: வைரல் வீடியோ!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி குடும்ப அரசியல் நடத்துகிறது என முதல்வர் ஹிமந்தா சர்மா குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories