இந்தியா

"GST-ல் மாநிலங்களுக்கு நிதிச்சுமை".. தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஜி.எஸ்.டி. அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"GST-ல் மாநிலங்களுக்கு நிதிச்சுமை".. தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகா முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மாநிலங்களிடையே நதிநீர் பகிர்வு, கடலோரப் பாதுகாப்பு, எரிசக்தி, சுற்றுச்சூழல், போக்குவரத்து, கல்வி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட 29 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி. அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகைக்கான காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

"GST-ல் மாநிலங்களுக்கு நிதிச்சுமை".. தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டிற்கு மழை, வெள்ள பாதிப்புகளுக்கான நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களையும், அண்டை மாநிலங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும். அதிவேக ரயில் பாதையை உருவாக்குவது ஏரோ விமானங்கள், ஆட்டோமொபைல்களை விட மிகவும் சிக்கனமானது.

இது அதிக ஆற்றல் திறன் கொண்டது குறைவான மாசுபாடு கொண்டது. மாநில பயணிகள் போக்குவரத்தில் சராசரி பயண வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை போன்ற தமிழ்நாட்டு வழித்தடங்களையும் அண்டை மாநில வழித்தடங்களையும் இணைக்க வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் வாங்க மாநில அரசு தயாராக உள்ளது.

விவசாயிகளையும், மாநில உரிமைகளையும் பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். மின் விநியோகத்திற்கான உரிமத்தை மாநில அரசுகளுக்கே மீண்டும் வழங்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.

"GST-ல் மாநிலங்களுக்கு நிதிச்சுமை".. தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

காற்றாலை மின் உற்பத்தியில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாடு 27 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளோம். பிற மின் ஆதாரங்களை ஒப்பிடுகையில் காற்றாலை இயந்திரங்கள் அதிஉயர் திறனில் இயங்குகின்றன.

காற்றாலையால் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் கடலோர காற்றாலைக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

தென் மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை, இது நிரூபிக்கப்பட்ட உண்மை. தென் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாதையில் பயணிக்க வேண்டும். அடுத்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories