இந்தியா

பள்ளி மாணவியை கடத்தி திருமணம்.. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: 6 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுச்சேரியில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி மாணவியை கடத்தி திருமணம்.. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: 6 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி (37). இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கடத்தி சென்றதாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சுந்தரி புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தஞ்சாவூரில் மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த சதீஷை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பள்ளி மாணவியை கடத்தி திருமணம்.. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: 6 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதில், மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்துதலில் ஈடுப்பட்டது தெரியவந்து. இதையத்து சதிஷ் மீது கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவியை கடத்தி திருமணம்.. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: 6 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த வழக்கானது புதுச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

banner

Related Stories

Related Stories