இந்தியா

RTI கேள்விக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த அதிர்ச்சி பதில்.. வங்கதேச சுதந்திர போராட்டம்-சிறை சென்றாரா மோடி?

வங்க தேச சுதந்திர போராட்டத்தில் பிரதமர் மோடி சிறை சென்றதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என ஆர்.டி.ஐ கேள்விக்குப் பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

RTI கேள்விக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த அதிர்ச்சி பதில்.. வங்கதேச சுதந்திர போராட்டம்-சிறை சென்றாரா மோடி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மேலும் அந்த நாட்டின் 50ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகவும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது அந்த விழாவில் பேசிய நரேந்திர மோடி, "வங்கதேச சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது நான் இளைஞனாக இருந்தேன். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து வங்கதேச சுதந்திரத்திற்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன்.

RTI கேள்விக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த அதிர்ச்சி பதில்.. வங்கதேச சுதந்திர போராட்டம்-சிறை சென்றாரா மோடி?

இந்த போராட்டத்தால் நான் கைது செய்யப்பட்டு சிறை சென்றேன்" என கூறி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் ஜெயேஷ் குர்னானி என்பவர் பிரதர் நரேந்திர மோடி பேசியது குறித்த ஆதாரங்களைக் கேட்டு மார்ச் 27, 2021 அன்று தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து ஆர்.டி.ஐ இது குறித்து பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

RTI கேள்விக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த அதிர்ச்சி பதில்.. வங்கதேச சுதந்திர போராட்டம்-சிறை சென்றாரா மோடி?

இந்த விளக்கத்திற்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், "வங்கதேச விடுதலைப் போருக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி சத்தியாகிரகம் இருந்து சிறை சென்றதாக எந்த ஆவணமும் இல்லை என தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரதமர் அலுவலகத்தின் இந்த பதில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories