இந்தியா

ரசிகர் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷா.. இதுதான் தேச பக்தியா?: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும்போது, அருகிலிருந்தவர் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷா.. இதுதான் தேச பக்தியா?: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்திச் சிறப்பாக விளையாடின.

இந்தப் போட்டியில் கோலி, ஜடேஜா, ஹர்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த அணியின் இந்த வெற்றியை மைதானத்தில் நேரில் பார்த்தவர்கள் முதல் தொலைக்காட்சி வழியாகப் பார்த்தவர்கள் வரை அனைவரும் கொண்டாடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போட்டியைக் காண்பதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகனும் பி.சி.சிஐ செயலாளருமான ஜெய்ஷாவும் வந்துள்ளார். அப்போது பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடினர்.

அங்கிருந்த ஒருவர் தனது கையிலிருந்த இந்தியத் தேசியக் கொடியை ஜெய்ஷாவிடம் கொடுத்துள்ளார். அப்போது ஜெய்ஷா தேசியக் கொடியை வாங்க மறுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷா.. இதுதான் தேச பக்தியா?: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இதையடுத்து ஜெய்ஷாவின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒன்றிய அரசுதான் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற சொன்னார்கள். ஆனால், ஒன்றிய அமைச்சரின் மகனே கையில் தேசியக் கொடியை வாங்க மறுத்துள்ளார். இதுதான் இவர்களின் தேச பக்தியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories