இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க மாணவர்களுக்கு தடை.. காஷ்மீர் NIT நிர்வாகத்தின் அறிவிப்பால் சர்ச்சை !

ஸ்ரீநகரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழக நிர்வாகம் மாணவர்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மாணவர்கள் குழுக்களாக பார்க்க தடை விதித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க மாணவர்களுக்கு தடை.. காஷ்மீர் NIT நிர்வாகத்தின் அறிவிப்பால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துபாயில் இன்று நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பதில் தினேஷ் கார்த்திக் தெரிவ்வுசெய்யப்பட்டுள்ளார்.

உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது இந்த போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க மாணவர்களுக்கு தடை.. காஷ்மீர் NIT நிர்வாகத்தின் அறிவிப்பால் சர்ச்சை !

இந்த நிலையில், இந்த ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மாணவர்கள் குழுக்களாக பார்க்க தடை விதித்துள்ளது.

மேலும், அவ்வாறு செய்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் போட்டி தொடர்பான எந்த பதிவுகளையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்றும், போட்டியின் போது அனைத்து மாணவர்களும் அறையில் தங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

NITநிர்வாத்தின் இந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளார். பலரும் சமூக வலைத்தளத்தில் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories