இந்தியா

15 ஆடுகளை திருடி விற்பனை செய்த பெண்.. 'காப்பு' மாட்ட வைத்த சி.சி.டி.வி காட்சிகள்!

புதுச்சேரியில் 15 ஆடுகளை திருடிய பெண் உட்பட2 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

15 ஆடுகளை திருடி விற்பனை செய்த பெண்.. 'காப்பு' மாட்ட வைத்த சி.சி.டி.வி காட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி திப்புராயபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (54). இவர் கடந்த 24 ஆம் தேதி 15 ஆடுகளைத் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது ஆடுகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

15 ஆடுகளை திருடி விற்பனை செய்த பெண்.. 'காப்பு' மாட்ட வைத்த சி.சி.டி.வி காட்சிகள்!

அதில், ஒரு ஆணும், பெண்ணும் ராஜாவின் ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து இவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதில் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வரும் முத்திரை பாளையத்தைச் சேர்ந்த வசந்தா (54), அவரது ஊழியர் அந்தோனி (50) என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பண தேவைக்காக ஆடுகளைத் திருடியதாகவும், இதேபோல் பல இடங்களில் ஆடு திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

15 ஆடுகளை திருடி விற்பனை செய்த பெண்.. 'காப்பு' மாட்ட வைத்த சி.சி.டி.வி காட்சிகள்!

மேலும் திருடிய 15 ஆடுகளில் 6 ஆடுகளை விற்பனை செய்ததுள்ளனர். இதனை அடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 9 ஆடுகளைப் பறிமுதல் செய்த போலிஸார் இருவரையும் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories