இந்தியா

ஒரே கிளிக்.. பறிபோன 21 லட்சம்.. ஒன்றும் அறியாத பெண் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம் ! நடந்தது என்ன ?

தெரியாத எண்ணிலிருந்து வந்த லிங்கை கிளிக் செய்த பெண் ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.21 லட்சம் பறிபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே கிளிக்..  பறிபோன 21 லட்சம்.. ஒன்றும் அறியாத பெண் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம் ! நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்தவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரின் வாட்ஸ்அப்க்கு தெரியாத நம்பர் ஒன்றில் இருந்து லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

உடனே அந்த லிங்கை இவர் கிளிக் செய்துள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்களில் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்து வங்கி அதிகாரிகளை தொடர்ந்து கொண்டு பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரே கிளிக்..  பறிபோன 21 லட்சம்.. ஒன்றும் அறியாத பெண் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம் ! நடந்தது என்ன ?

அதற்கு உங்களின் ஒப்புதலோடுதான் அந்த பணம் அனுப்பப்பட்டது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த வழக்கு சைபர் கிரைம் போலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

லிங்க்கை கிளிக் செய்தவுடன் வரலட்சுமியின் மொபைலில் பதிவுசெய்யப்பட்ட வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதன்மூலம் பணம் திருடப்பட்டிருக்கலாம் என் போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories