இந்தியா

சட்டவிரோதமாக ஊடகத்தில் ஊடுருவல்.. NDTV-யின் ஒப்புதல் இல்லாமலே 29.18 % பங்குகளை வாங்கிய அதானி!

அதானி குழுமம் ஒப்புதல் இல்லாமலே பங்குகளை வாங்கியதாக NDTV குற்றச்சாட்டு வைத்துள்ளது.

சட்டவிரோதமாக ஊடகத்தில் ஊடுருவல்.. NDTV-யின் ஒப்புதல் இல்லாமலே 29.18 % பங்குகளை வாங்கிய அதானி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக NDTV இருந்து வருகிறது. இந்த செய்தி நிறுவனத்தைப் பிரபல தொழிலதிபரான அதானி வாங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

அதானி குழுமம் வெளியிட்ட அறிவிப்பின்படி, NDTVயின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக வாங்கும் என்றும் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்பை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஊடகத்தில் ஊடுருவல்.. NDTV-யின் ஒப்புதல் இல்லாமலே 29.18 % பங்குகளை வாங்கிய அதானி!

NDTVயின் 29.18 சதவீத பங்குகள் விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோரால் உருவாக்கப்பட்ட RRPR நிறுவனத்துக்குச் சொந்தமானதாக இருந்தது. அதை தற்போது அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் எவ்வித கலந்தாலோசனையும் நடத்தாமல் RRPR நிறுவனத்தின் பங்குகளைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவது NDTV நிறுவனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் RRPR நிறுவனத்திடம் இருந்து வாங்கிய கடன்களைப் பங்குகளாகக் கொடுத்தது பற்றி தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் 29.18% பங்குகளை அதானி மீடியா குழுமம் வாங்க உள்ளது.

சட்டவிரோதமாக ஊடகத்தில் ஊடுருவல்.. NDTV-யின் ஒப்புதல் இல்லாமலே 29.18 % பங்குகளை வாங்கிய அதானி!

அதேபோல் 2009 -10ம் ஆண்டில் ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகியோருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் VCPL தனது உரிமையைப் பயன்படுத்தியதாக NDTV நிறுவனம் தெரிவித்துள்ளது. NDTV அதன் செயல்பாடுகளில், பத்திரிகை தர்மத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஊடகங்களை ஒன்றிய அரசு அச்சுறுத்தி வருகிறது என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அதானி குழுமம் NDTV நிறுவனத்தின் பங்குகளை மறைமுகமாக வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories