இந்தியா

5.5 பில்லியன் டாலர் சொத்து.. முதலீட்டாளர்களின் ‘குரு’ - ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!

இந்தியாவின் வாரன் பப்பெட் என்ற, இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் குரு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை காலமானார் (62).

5.5 பில்லியன் டாலர் சொத்து..  முதலீட்டாளர்களின் ‘குரு’ - ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் வாரன் பப்பெட் என்ற, இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் குரு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை காலமானார் (62). கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே கடந்தாண்டு முதலீட்டாளர்கள் கூட்டமொன்றில் பேசும்போது, “எனது வாழ்க்கையில் பெரிய ஆசைகள் எதுவுமில்லை. வருத்தங்கள் இல்லை. ஒரேயொரு சிறுகுறை . உடல்நலத்தை கவனித்திருக்க வேண்டும். கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று சொன்னார்.

banner

Related Stories

Related Stories