இந்தியா

அக்காவை கொன்று அவரின் காதலரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த தம்பி.. மராட்டியத்தில் நடந்த கொடூரம்..

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்காவையும் அவரது காதலரையும் கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்காவை கொன்று அவரின் காதலரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த தம்பி.. மராட்டியத்தில் நடந்த கொடூரம்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் , அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சஞ்சய் (வயது 22) என்ற இளைஞரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது திருமணம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இளம்பெண்ணின் உறவினர்கள் ராகேஷை சந்தித்து அந்த பெண்ணிடம் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

அக்காவை கொன்று அவரின் காதலரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த தம்பி.. மராட்டியத்தில் நடந்த கொடூரம்..

ஆனாலும் எதிர்ப்பை பொறுப்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராகேஷிம் அந்த இளம்பெண்ணும் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து அந்த பெண்ணின் 17 வயது தம்பியிடம் கூறியுள்ளனர். உடனே பெண்ணின் தம்பியும் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக்கொண்டு தனது அக்கா பேசிக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்றவர் தான் எடுத்துவந்திருந்த துப்பாக்கியால் ராகேஷின் தலையில் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், தனது நண்பர்களின் உதவியோடு அக்காவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளார்.

அக்காவை கொன்று அவரின் காதலரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த தம்பி.. மராட்டியத்தில் நடந்த கொடூரம்..

பின்னர் நேரடியாக காவல்நிலையம் சென்றவர் அவர் நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். பின்னர் போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இருவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மூவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்கா என்றும் பாராமல் தம்பியே இந்த கொடூர செயலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories