இந்தியா

“தேசியக்கொடி ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள்” : பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!

“தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள், தேசப்பற்று உள்ளவர்கள் யார்?” என உத்தராகண்ட் பா.ஜ.க தலைவர் மஹேந்திர பட் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தேசியக்கொடி ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள்” : பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளோம். இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேசியக்கொடியை மக்கள் கட்டாயம் வாங்க வைக்கும் வகையில், ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்கினால்தான் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“தேசியக்கொடி ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள்” : பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!

இதனையடுத்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உத்தராகண்ட் பா.ஜ.க தலைவரின் கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உத்தராகண்ட் பா.ஜ.க தலைவர் மஹேந்திர பட் கூறுகையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படாத வீடுகளில் வசிக்கும் மக்களை இந்த நாடு நம்பத் தயாராக இல்லை. தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள், தேசப்பற்று உள்ளவர்கள் யார்?. இல்லாதவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories