இந்தியா

Realme, Vivo, Oppo.. சீன செல்போன்கள் விற்பனைக்குத் தடை?: ஒன்றிய அரசு அதிரடி திட்டம்!

சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Realme, Vivo, Oppo.. சீன செல்போன்கள் விற்பனைக்குத் தடை?: ஒன்றிய அரசு அதிரடி திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தில் இருந்தே சீன தயாரிப்புகளுக்குத் தடைவிதித்து வருகிறது. குறிப்பாக செல்போன்களில் உள்ள சீன தயாரிப்பு ஆப்புகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ரூ.12 ஆயிரத்திற்குக் குறைவான சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் ஜியோமி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைவைத்துள்ளது.

Realme, Vivo, Oppo.. சீன செல்போன்கள் விற்பனைக்குத் தடை?: ஒன்றிய அரசு அதிரடி திட்டம்!

இதன் காரணமாகவே ஒன்றிய அரசு சீன செல்போன்களுக்கு தடை விதிக்கும் தகவல் உறுதி செய்யும் விதமாக உள்ளது என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இதனால் Xiaomi, Poco, Realme, Vivo மற்றும் Oppo போன் சீன தயாரிப்பு செல்போன்களுக்கு பின்னடைவு ஏற்பட உள்ளது.

மேலும் உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் சில ஆண்டுகளாக இந்தியாவில் ரூ.15 ஆயிரத்திற்குக் கீழ் விற்பனையாகும் செல்போன்கள் அதிக அளவிற்கு விற்பனையாகியுள்ளது. இதில் சீன தயாரிப்பு செல்போன் நிறுவனங்களே அதிக லாபம் அடைந்துள்ளன.

Realme, Vivo, Oppo.. சீன செல்போன்கள் விற்பனைக்குத் தடை?: ஒன்றிய அரசு அதிரடி திட்டம்!

அதேபோல், சீன Xiaomi, Vivo மற்றும் Oppo உள்ளிட்ட சில சீன நிறுவனங்கள் வரி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்தான் சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories