இந்தியா

கேரளாவில் ஒரு காசி:'வீடியோ மூலம் பிரபலமாவது எப்படி?'-பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த டிக்டாக் பிரபலம் கைது

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல டிக்டாக் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஒரு காசி:'வீடியோ மூலம் பிரபலமாவது எப்படி?'-பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த டிக்டாக் பிரபலம் கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் வினீத் (வயது 25). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானார். இதனால் இவருக்கு ஏராளமான பெண்கள் ரசிகர்களாக உள்ளனர். டிக்டாக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் இவர், தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினீத்துக்கு கொல்லம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இவர்களது இன்ஸ்டாகிராம் பழக்கம் நாளடைவில் மொபைல் எண் மூலம் ஆடியோ, வீடியோ கால் பேசுவதாக அதிகரித்தது. அந்த இளம்பெண், ஒவ்வொரு முறையும் வீடியோ கால் செயும்போது இவர் அவரை ஆபாசமாக படமெடுத்துள்ளார்.

கேரளாவில் ஒரு காசி:'வீடியோ மூலம் பிரபலமாவது எப்படி?'-பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த டிக்டாக் பிரபலம் கைது

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை வினீத் தனியாக அழைத்துள்ளார். மேலும் அவருக்கு ரீல்ஸ் மூலம் பிரபலமாவது எப்படி என்று சொல்லி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி, அவரை சந்திக்க வந்துள்ளார். அப்போது வினீத் அவரை ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரிடம் தான் எடுத்து வைத்திருந்த ஆபாச புகைப்படங்களை காட்டியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி வினீத்திடம் சண்டையிட்டுள்ளார்.

வினீத் அந்த மாணவியிடம் தன்னுடன் உறவுகொள்ளவில்லை என்றால் இதை வெளியிடுவதாக மிரட்டி கட்டயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வினீத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொபைலை சோதனை செய்த போது, பாதிக்கப்பட்ட பெண் மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுபோல் பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories