இந்தியா

புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மோதிய கார் ! 'இண்டிகோ' விமானங்களுக்கு என்ன ஆனது?

டெல்லியில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கார் ஒன்று மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மோதிய கார் ! 'இண்டிகோ' விமானங்களுக்கு என்ன ஆனது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தது.

இந்த நிலையில், 'Go First airline' விமான நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஒன்று, அங்கு வந்து நின்று புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமான சக்கரத்தில் மோதியது.

இதில் அந்த காரானது சக்கரத்தின் அடியில் சென்றதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் விமானத்திற்கோ அல்லது அங்கிருந்த பயணிகளுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. பின்னர் திட்டமிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) விசாரித்து வருகிறது. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கார் ஒன்று மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories