இந்தியா

மாணவருக்கு 100-க்கு 151 மதிப்பெண் கொடுத்த பல்கலைக்கழகம்.. வடமாநில கல்வித்துறையின் லட்சணம் இதுதானா ?

பீகாரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு 100க்கு 151 மதிப்பெண் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவருக்கு 100-க்கு 151 மதிப்பெண் கொடுத்த பல்கலைக்கழகம்.. வடமாநில கல்வித்துறையின் லட்சணம் இதுதானா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் மாநிலத்தின் தார்பங்காவில் லலித் நாராயண் மிதிலா பல்கழைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் BA ஹானர்ஸ் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவில் பயின்ற மாணவர் ஒருவருக்கு 100க்கு 151 மதிப்பெண் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவருக்கு 100-க்கு 151 மதிப்பெண் கொடுத்த பல்கலைக்கழகம்.. வடமாநில கல்வித்துறையின் லட்சணம் இதுதானா ?

அதைப்போல BCom மாணவர் ஒருவருக்கு அக்கவுண்டிங் அண்ட் ஃபைனான்ஸ் பேப்பரில் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்துள்ள பல்கலைக்கழகம் பூஜ்ஜியம் பெற்றிருந்தாலும் அவர் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் வழங்கியுள்ளது.

இது குறித்து கூறியுள்ள அப்பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது, இத தவறு டைப்போ எரர் வகையில் நடைபெற்றது. இந்த தவறு சரி செய்யப்படும். அனைத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழும் திரும்பப் பெறப்பட்டு சரி பார்த்து புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவருக்கு 100-க்கு 151 மதிப்பெண் கொடுத்த பல்கலைக்கழகம்.. வடமாநில கல்வித்துறையின் லட்சணம் இதுதானா ?

151 மதிப்பெண் பெற்ற மாணவருக்கும், பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவருக்கும் தவறு சரிசெய்யப்பட்டு புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற தவறுகளும் சரிசெய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories