இந்தியா

“சுஷாந்த் சிங் படத்தை போட்டு வம்பில் மாட்டிக்கொண்ட flipkart” - டி-ஷர்ட்டில் எழுதி இருந்த ‘பகீர்’ வாசகம் !

பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுஷாந்த் சிங் படத்துடன் கூடிய டி-ஷர்ட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“சுஷாந்த் சிங் படத்தை போட்டு வம்பில் மாட்டிக்கொண்ட flipkart” - டி-ஷர்ட்டில் எழுதி இருந்த ‘பகீர்’ வாசகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மறைவு நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரது மரணத்திற்கு பலரும் நீதி கேட்டு #JusticeforSSR என்ற ஹேஷ்டெக்கை ரெண்ட் செய்து வந்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுஷாந்த் சிங் படத்துடன் கூடிய டி-ஷர்ட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்தை அச்சிட்டு "Depression is like drowning" (மன அழுத்தம் என்பது நீரில் மூழ்குவதைப் போன்றது) என்னும் வாசகம் இடம்பெற்றது.

இந்நிலையில் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கொந்தளித்த சுஷாந்த் சிங் ரசிகர்கள், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளிவாரத நிலையில் இதுபோல விளம்பரம் செய்வது கண்டனக்குறியது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் Boycott Flipkart என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories