இந்தியா

முறைகேடாக லைசன்ஸ் பெற்று ‘சொகுசு விடுதி - பார்’ நடத்திய ஒன்றிய அமைச்சரின் குடும்பம்: விசாரணையில் அம்பலம்!

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் ஸோய்ஸ் முறைகேடாக லைசன்ஸ் பெற்று மதுபான பார் நடத்தி வந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முறைகேடாக லைசன்ஸ் பெற்று ‘சொகுசு விடுதி - பார்’ நடத்திய ஒன்றிய அமைச்சரின் குடும்பம்: விசாரணையில் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் ஸோய்ஸ் ராணி. இவர் கோவாவில் உள்ள அஸ்ஸாகவோ பகுதியில் செகுசு மதுமான விடுதி மற்றும் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதுமான விடுதியின் உரிமம் முடிந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் அந்தோணி காமா என்ற பெயரில் உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் கோவா சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஸோய்ஸ் ராணி பதிவு செய்திருந்த உரிமம் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது, அந்தோணி காமா கடந்த 2021ம் ஆண்டே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் ஸோய்ஸ் ராணி வழக்கறிஞர் ரிஸ் ரோட்ரிகஸ் என்பவர் ரெஸ்டாரண்டு ஆவணங்களை போலியாக தயாரித்து லைசன்ஸ் பெற்றதாக கோவாவின் சுங்கவரித்துறை ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விவகாரம்ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஒன்றிய் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் கோவால் முறைகேடாக லைசன்ஸ் பெற்று மதுபான பார் நடத்தி வந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories