இந்தியா

நாயின் கழுத்தில் கல்லை கட்டி உயிரோடு ஆற்றில் வீசிய இளைஞர்கள்.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி வீடியோ!

மகாராஷ்டிராவில் நாயின் கழுத்தில் கல்லைக் கட்டி ஆற்றில் இளைஞர்கள் தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நாயின் கழுத்தில் கல்லை கட்டி உயிரோடு ஆற்றில் வீசிய இளைஞர்கள்.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், பல்லார்பூர் தாலுக்காவிற்குட்பட்டது தஹாலி கிராமம். அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று சாலையில் நடந்த சென்ற ஒருவரைக் கடித்துள்ளது.

இதனால் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் நாயைப் பிடித்து அதன் கழுத்தில் பெரிய கல்லை கட்டியுள்ளனர். பிறகு அருகே உள்ள ஆற்றுக்குசென்று நாயைக் கல்லோடு சேர்த்துத் தூக்கி வீசியுள்ளனர்.

இதையடுத்து சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஆற்றிலிருந்து நாய் வேகமாக ஓடி அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்ததுள்ளார்.

நாயின் கழுத்தில் கல்லை கட்டி உயிரோடு ஆற்றில் வீசிய இளைஞர்கள்.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி வீடியோ!

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து வீடியோவில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த மனிதாபிமான அற்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories