இந்தியா

தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்.. நீட்தேர்வு எழுதவந்த மாணவிகளை அவமதித்த அதிகாரிகள்!

மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நீர் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்..  நீட்தேர்வு எழுதவந்த மாணவிகளை அவமதித்த அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில், மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்..  நீட்தேர்வு எழுதவந்த மாணவிகளை அவமதித்த அதிகாரிகள்!

மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரி பரிசோதித்த தேர்வு மைய கண்காணிப்பாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் உள்ளாடைகளில் உலோக ஹூக்குகள் இருப்பதால் அவர்களைத் தேர்வு மையத்தில் அனுமதிக்கமுடியாது என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதனால் மாணவிகள் தங்களின் உள்ளாடைகளை கழிட்டிவிட்டு தேர்வு மையத்திற்குச் சென்றுள்ளனர். மேலும் ஒரு அறையில் மாணவிகளில் உள்ளாடைகளைத் தேர்வு மைய அதிகாரிகள் குவியலாக போட்டுள்ளனர். தேர்வு மைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மாணவிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்..  நீட்தேர்வு எழுதவந்த மாணவிகளை அவமதித்த அதிகாரிகள்!

இந்த அவலம் குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தந்தை ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேடும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories