இந்தியா

ஓடும் வண்டி மீது தண்டால் எடுத்த இளைஞர்.. கெத்தாக சாகசம் செய்தபோது நடந்த பரிதாபம்!

சாகசம் செய்வதாக நினைத்து ஓடம் வண்டியின் மேல் தண்டால் எடுத்த இளைஞர் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓடும் வண்டி மீது தண்டால் எடுத்த இளைஞர்.. கெத்தாக சாகசம் செய்தபோது நடந்த பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேகமாக செல்லும் குப்பை வண்டியின் மேல் நின்று இளைஞர் ஒருவர் சாகசம் செய்வதாக நினைத்து தண்டால் எடுக்கும் போது தவறி கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞர் ஓடும் குப்பை வண்டியின் மீது ஏறி கெத்தாக நினைத்து தண்டால் எடுத்துள்ளார்.

அந்த இளைஞர் வண்டி மீது ஆறுமுறை தண்டால் எடுத்த பிறகு கெத்தாக எழுந்து நின்றுள்ளார். அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் வண்டியின் மீது நின்றிருந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார்.

இதில் அவரது இடுப்பு எலும்பு லேசாக முறிந்துள்ளது. மேலும் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞர் வீட்டில் இருந்துகொண்டே மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓடும் வண்டி மீது தண்டால் எடுத்த இளைஞர்.. கெத்தாக சாகசம் செய்தபோது நடந்த பரிதாபம்!

இந்த வீடியோவை லக்னோ போலிஸார் தங்களது ட்விட்டரில் வெளியிட்டு, சக்திமானாக மாற நினைத்தவர் இன்று உட்கரா கூட சக்தி இல்லாமல் உள்ளார். தேவையற்ற சாகசங்களைச் செய்யாதீர்கள் என பதிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories