இந்தியா

ஏமாற்றி விட்டார்கள், வேலையில்லா திண்டாட்டம்.. இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா? : ராகுல் காந்தி கேள்வி!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்காக உயர்ந்துவிட்டது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஏமாற்றி விட்டார்கள், வேலையில்லா திண்டாட்டம்..  இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா? : ராகுல் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஏமாற்றி விட்டார்கள், வேலையில்லா திண்டாட்டம்..  இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா? : ராகுல் காந்தி கேள்வி!

கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்வீட்டரில், "பிரதமர் மோடியின் ஆட்சிகாலத்தில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்காக உயர்ந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று?" என பதிவிட்டுள்ளார்.

ஏமாற்றி விட்டார்கள், வேலையில்லா திண்டாட்டம்..  இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா? : ராகுல் காந்தி கேள்வி!

மேலும் தவறாகிவிட்டது. ஏமாந்துவிட்டார்கள். ஏமாற்றிவிட்டார்கள். பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்று ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories