இந்தியா

“நாளைக்கு மீண்டும் வருவேன்” : பட்டாக் கத்தியுடன் அரசு பள்ளிக்கு வந்து எச்சரிக்கை விடுத்த தந்தை ! (Video)

பீகாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பட்டாக் கத்தியுடன் வந்த நபர் மிரட்டல் விடுத்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“நாளைக்கு மீண்டும் வருவேன்” : பட்டாக் கத்தியுடன் அரசு பள்ளிக்கு வந்து எச்சரிக்கை விடுத்த தந்தை ! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சீருடைக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஒரு மாணவிக்கு சீருடைக்கான பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவியின் தந்தை பட்டாகத்தியுடன் பள்ளிக்கு வந்து தனது மகளுக்கு பணம் வராததைக் குறித்து கேட்டுள்ளார்.

“நாளைக்கு மீண்டும் வருவேன்” : பட்டாக் கத்தியுடன் அரசு பள்ளிக்கு வந்து எச்சரிக்கை விடுத்த தந்தை ! (Video)

வந்தவர் 24 மணி நேரத்துக்குள் தன் மகளுக்கான சீருடைக்கு உரிய பணத்தைக் கொடுக்காவிட்டால் நாளை மீண்டும் வருவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

பட்டாக் கத்தியுடன் மேலாடை இன்றி ஒருவர் பள்ளிக்கு வந்த மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த நபர் மேல் பள்ளி முதல்வர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த மிரட்டல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories