இந்தியா

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமாவை அடுத்து.. 395 பா.ஜ.க MP-களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை!

ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மோடி அமைச்சரவையில் ஒரு இஸ்லாமிய அமைச்சர் கூட இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமாவை அடுத்து..  395 பா.ஜ.க MP-களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றார். பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து நடைபெற்ற தேர்தலிலும் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து மீண்டும் பிரதமராக மோடி தொடர்ந்தார். பிறகு புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வி பதவியேற்றார்.

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமாவை அடுத்து..  395 பா.ஜ.க MP-களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை!

இவர் மாநிலங்களை உறுப்பினராக இருந்து அமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில் இவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் அண்மையில் 15 மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களைத் தேர்தலில் பா.ஜ.க தலைமை இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதனால் முக்தார் அப்பாஸ் நக்வி அமைச்சராகத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முக்தார் அப்பாஸ் நக்வி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பை அடுத்து மோடி தலைமையிலான பா.ஜ.க அமைச்சர் அவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமாவை அடுத்து..  395 பா.ஜ.க MP-களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை!

அதேபோல் நேற்று மற்றொரு ஒன்றிய அமைச்சரான ஆர்.சி.பி. சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருடைய மாநிலங்களை உறுப்பினர் பதவி காலமும் இன்றுடன் முடிவடைந்தது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்து இரண்டு ஒன்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படாததால் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமாவை அடுத்து..  395 பா.ஜ.க MP-களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை!

இந்திய நாட்டில் மிகப் பெரிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஒன்றிய அமைச்சராக இல்லாமல் இருப்பது, நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த 395 எம்.பி-களில் ஒருவர் கூட இஸ்லாமியர்கள் இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக இந்திய நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட அமைச்சராக இல்லாமல் இருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories