இந்தியா

மோடியை விடாமல் துரத்திய கருப்பு பலூன்கள்.. பிரதமர் வருகைக்கு எதிராக பறக்க விட்ட பலூன்களால் பரபரப்பு!

ஆந்திராவில் கருப்பு பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மோடியை விடாமல் துரத்திய கருப்பு பலூன்கள்.. பிரதமர் வருகைக்கு எதிராக பறக்க விட்ட பலூன்களால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திராவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி பீமா வரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.

அப்போது, சிலர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டுள்ளனர். இந்த பலூன்கள் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் அருகே பறந்து சென்றால் அதிகாரிகள் அனைவரும் பதற்றமடைந்துள்ளனர்.

மோடியை விடாமல் துரத்திய கருப்பு பலூன்கள்.. பிரதமர் வருகைக்கு எதிராக பறக்க விட்ட பலூன்களால் பரபரப்பு!

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்ட சில நிமிடங்களில் கருப்பு பலூன்கள் ஆகாயத்தில் பறக்கிறது.

அப்போது பாதுகாப்புக்கான ராணுவ ஹெலிகாப்டர் முன்னும் பின்னும், செல்ல நடுவில் பிரதமரின் ஹெலிகாப்டர் பறந்து செல்கிறது. இந்த விமானங்கள் அருகே கருப்பு பலூன்களும் பறந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த கருப்பு பலூன்கள் குறித்து விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர்தான் பலூன்களை பிரதமர் நநேரத்திர மோடி செல்லும்போது பறக்க விட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த 4 பேரையும் பிடிக்க போலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் கருப்பு பலூன் எதிர்ப்பு போராட்டம்.

மோடியை விடாமல் துரத்திய கருப்பு பலூன்கள்.. பிரதமர் வருகைக்கு எதிராக பறக்க விட்ட பலூன்களால் பரபரப்பு!

பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அவருக்கு எதிராகக் கருப்பு கொடிகாட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் தங்களின் எதிர்ப்புகளைப் பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories