இந்தியா

ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி.. விரைந்து காப்பாற்றிய போலிஸ்! -சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த கர்ப்பிணியை துரிதமாக செயல்பட்டு போலிஸார் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி.. விரைந்து காப்பாற்றிய போலிஸ்! -சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து பின்னர் காப்பாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லட்சுமிபாய் ரயில் நிலையத்தில் கணவர் மற்றும் கைக்குழந்தையோடு கர்ப்பிணி ஒருவர் ரயில் ஏற வந்துள்ளார். அப்போது அவர்கள் ஏற வேண்டிய ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்வதை அறிந்த அவர்கள் அவசரமாக ரயிலில் ஏற முயன்றுள்ளனர்.

அப்போது நிலைதடுமாறிய கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்துள்ளார்.அப்போது இதை கண்ட ரயில்வே பாதுகாப்பு போலிஸார் ஒருவர், துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் அங்கு பதைபதைப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கர்ப்பிணியை காப்பாற்றிய அந்த போலிஸாரை பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories