இந்தியா

ஷோரூமில் நிறுத்திவைக்கப்பட்ட ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்!

கர்நாடகாவில் எலக்ட்ரிக் வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபதில் பல எலக்ட்ரிக் பைக் எரிந்து சேதமடைந்தது.

ஷோரூமில் நிறுத்திவைக்கப்பட்ட ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர். மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின.

பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்தவாகனங்களில்பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷோரூமில் நிறுத்திவைக்கப்பட்ட ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்!

இந்நிலையில், கர்நாடகாவில் வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபதில் பல எலக்ட்ரிக் பைக் எரிந்து சேதமடைந்தது. கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் நாகுரி என்ற இடத்தில் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் விற்பனை மையம் உள்ளது.

அப்போது வழக்கம் போல நிறுத்திவைக்கப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புதிய பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் தீக்கிரையாகி உள்ளன. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர் பல லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories