இந்தியா

BACK FLIP செய்ய முயன்ற கன்னட நடிகர்.. விபரீதத்தில் முடிந்த சாகச வீடியோ: நடந்தது என்ன?

கன்னட நடிகர் திக்நாத் BACK FLIP செய்ய முயன்றபோது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

BACK FLIP செய்ய முயன்ற கன்னட நடிகர்.. விபரீதத்தில் முடிந்த சாகச வீடியோ: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Instagram போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு இதில் வைரலாகும் சாகச வீடியோவைப் பார்த்து பலரும் அதேபோல் செய்து வீடியோ வெளியிட்டு வருவது வாடிக்கையாகவிட்டது.

அந்த வகையில், அண்மைக் காலமாக BACK FLIP சாகச வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த BACK FLIP சாகசத்தை இளைஞர்கள் பலரும் முயற்சி செய்து தங்களது சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறனர்.

BACK FLIP செய்ய முயன்ற கன்னட நடிகர்.. விபரீதத்தில் முடிந்த சாகச வீடியோ: நடந்தது என்ன?

இந்நிலையில், கன்னட நடிகர் திக்நாத் BACK FLIP செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னட நடிகரான திகாந்த் மஞ்சாலே, தனது மனைவியுடன் கோவா சென்றுள்ளார். அங்கு அவர் BACK FLIP சாகசத்தைச் செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்ததில் அவரது முதுகுத் தண்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

BACK FLIP செய்ய முயன்ற கன்னட நடிகர்.. விபரீதத்தில் முடிந்த சாகச வீடியோ: நடந்தது என்ன?

உடனே அவர் கோவாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படார். பிறகு அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories