இந்தியா

“ஐ.ஏ.எஸ் அதிகாரி TO குடியரசுத் தலைவர் வேட்பாளர்” : யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த பாதை!

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.

“ஐ.ஏ.எஸ் அதிகாரி TO குடியரசுத் தலைவர் வேட்பாளர்” : யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த பாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தனர்.

பின்னர், குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று சரத்பவார் தலைமையில் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

* பீகார் மாநிலம் பாட்னாவில் 1937-ல் பிறந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் பொலிட்டிகல் சயின்ஸ் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

* பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

* ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகாலம் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

* 1971ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டு காலத்திற்கு ஜெர்மனிக்கான இந்திய தூதரகத்தில் முதன்மை செயலராகப் பணியாற்றியிருக்கிறார்.

* ஜெர்மனிக்கான இந்திய தூதரக தலைவராகவும் பணியாற்றினார்.

* 1984-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் பணியாற்றத் தொடங்கினார்.

* 1986-ல் ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டார்.

“ஐ.ஏ.எஸ் அதிகாரி TO குடியரசுத் தலைவர் வேட்பாளர்” : யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த பாதை!

* 1988-ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1989-ல் ஜனதாதளம் கட்சி உருவானபோது அதன் பொதுச் செயலாளர் யஷ்வந்த் சின்ஹா ஆனார்.

* 1990-ல் இந்தியாவின் நிதியமைச்சராக சந்திரசேகர் அமைச்சரவையில் பணியாற்றினார்.

* 1996-ல் பா.ஜ.கவில் இணைந்து தேசிய செய்தித் தொடர்பாளராகவும் யஷ்வந்த் சின்ஹா இருந்துள்ளார்.

* யஷ்வந்த் சின்ஹா 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஹசாரிபாக் லோக்சபா தொகுதியில் இருந்து பா.ஜ.க சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில் மார்ச் 1998-ல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா.

* 2002-ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராகவும் இருந்துள்ளார்.

* பா.ஜ.க கட்சியிலிருந்து விலகி 2021ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் யஷ்வந்த சின்ஹா.

இந்நிலையில்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் யஷ்வந்த சின்ஹா.

banner

Related Stories

Related Stories