இந்தியா

இறந்த இளம் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர்.. உறவினர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில், உயிரிழந்த இளம் பெண் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த இளம் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர்.. உறவினர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், மஜ்காவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இளம் பெண்ணான இவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மீது அத்தை மகன் கரண் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்துள்ளார்.

இதனால ஜாதியின் இறப்பால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, ஜோதியின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவரது உடலை தீ மூட்டியுள்ளார். அப்போது இதைப்பார்த்துக் கொண்டிருந்த கரண் திடீரென அந்த தீயில் குதித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத உறவினர்கள் அவரை தீயில் இருந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அதிக தீ காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இளம் பெண் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த அத்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories