இந்தியா

அடுத்த 6 மாதத்தில்.. வேலையை ராஜினாமா செய்யப்போகும் 86% இந்தியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் அடுத்த 6 மாதத்தில் 86% இந்தியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய உள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த 6 மாதத்தில்.. வேலையை ராஜினாமா செய்யப்போகும் 86% இந்தியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பரவிய கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் பொருளாதாரமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால், விலைவாசி உள்ளிட்ட பிரச்சனை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், இந்த இரண்டு வருடங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது வாழ்க்கையிலும் பெரிய பாதிப்பை இந்த கொரோனா ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எல்லோரும் ஒருவிதமான இருக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக உளவியல் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் மீண்டு வந்தாலும், மக்களின் வாழ்க்கை பழையபடி இயல்பாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்த 6 மாதத்தில் 86% இந்தியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய உள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் 12 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

இதில், இந்தியாவில்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவர்கள் வேலையை ராஜினாமா செய்வதற்கு, தொழிலில் முன்னேற்றம், ஊதியத்தில் மகிழ்ச்சியின்மை போன்ற காரணங்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 61% ஊழியர்கள் தற்போது வாங்கும் ஊதியத்தை விடக் குறைவாகவோ அல்லது ஊதியமாக இருந்தாலும், வேறு வேலைக்கு மாறுவதற்குத் தயாராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார்த் துறையை விட பொதுத்துறை ஊழியர்களே தங்களின் வேலையை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories