இந்தியா

“காணாமல் போன பின்னணி பாடகி.. 12 நாட்கள் கழித்து சடலமாக மீட்ட போலிஸார்” : டெல்லியில் நடந்த பகீர் சம்பவம்!

டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல பாடகி சங்கீதா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காணாமல் போன பின்னணி பாடகி.. 12 நாட்கள் கழித்து சடலமாக மீட்ட போலிஸார்” : டெல்லியில் நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல பாடகி சங்கீதா. இவர் தனது தாய் தந்தையுடன் ஒருவீட்டில் வசித்து வந்துள்ளார். பல சினிமா பாடலுக்கு பின்னணி பாடகராக இருந்துள்ளார் சங்கீதா. இந்நிலையில், பாடகி சங்கீதா கடந்த 12 நாட்களுக்கு முன்பு புதிய பாடலுக்கு பின்னணி கொடுக்க செல்லவிருப்பதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்கமாக சங்கீதா, காலைச் சென்றால் இரவு வெகு நேரத்திற்கு பிறகுதான், வீட்டு திரும்புவார். அதனால் பெற்றோரும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. மறுநாள் காலையில் செல்போனுக்கு தொடர்புக்கொண்டபோது, போன் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தபுகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் மஹம் என்னும் இடத்தில் இருந்து சடலமாக சங்கீதா மீட்டப்பட்டனர்.

இந்நிலையில், பாடகி சங்கீதாவுடன் பணியாற்றிய ரவி மற்றும் ரோகித் ஆகியோர் தான் கடத்தி கொலை செய்திருக்கலாம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். காணாமல் போன பின்னணி பாடகி 12 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories