இந்தியா

பாஜகவுக்கு கிலியை கொடுத்த அக்கட்சி எம்.பி.. மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் அர்ஜுன் சிங்!

பாஜகவுக்கு கிலியை கொடுத்த அக்கட்சி எம்.பி.. மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் அர்ஜுன் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன் சிங் நேற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சிங், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பா.ஜ.கவில் இணைந்தார். அங்கு அவருக்கு பராக்பூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்.

பாஜகவுக்கு கிலியை கொடுத்த அக்கட்சி எம்.பி.. மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் அர்ஜுன் சிங்!

கடந்த சில நாட்களாக அவர் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸில் இணைய இருப்பதாகவும், பாஜக மீது அர்ஜுன் சிங் அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் நேற்று அவர் அக்கட்சியில் மீண்டும் சேர்ந்தார்.

மேலும், அர்ஜுன் சிங்கின் மகன் பவன்சிங் பட்பாரா தொகுதியின் பாஜகவின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். எம்.பியாக இருந்த அர்ஜுன் சிங் தாய் கட்சியில் இணைந்ததை அடுத்து பவன் சிங்கும் விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால், மேற்குவங்க பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் இது தேசிய அளவிலான அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories