இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. விஷம் அருந்திய மணமகள்: காரணம் என்ன?

ஆந்திராவில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. விஷம் அருந்திய மணமகள்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், மதுரவாடா பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவருக்கு ஸ்ருஜனா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நாளில் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற இருந்தது.

அப்போது, மணமேடையில் அமர்ந்திருந்த மணமகள் தீடிரென மயங்கி மணமகன் மடியில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உடனே மணமகள் ஸ்ருஜனாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் மணமகள் ஸ்ருஜனாவில் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் விஷம் அருந்தி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனால், மணமகள் விருப்பம் இல்லாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories