இந்தியா

மது குடிக்க இப்படியொரு திட்டமா? : புதுவையில் வாகன சோதனையின் போது பிடிபட்ட போதை ஆசாமி.. நடந்தது என்ன?

மது குடிப்பதற்காக புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 10 விலையுர்ந்த இருசக்கர வாகனங்களை திருடியவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மது குடிக்க இப்படியொரு திட்டமா? : புதுவையில் வாகன சோதனையின் போது பிடிபட்ட போதை ஆசாமி.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி திருபுவனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் திருடுபோனதால், திருபுவனை காவல்நிலையம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரி - தமிழக எல்லையான மதகடிப்பட்டு பகுதியில் போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, விழுப்புரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் தற்போது வேலை இல்லாமல் இருப்பதும், மது குடிப்பதற்காக திருபுவனை, வில்லியனூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலிசார், அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories