இந்தியா

கோழிக்கறியில் நெளிந்த புழு.. கடைக்காரரின் பேச்சால் ஷாக்கான வாடிக்கையாளர்.. புதுவையில் பரபரப்பு!

வீட்டுக்கு சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு.

கோழிக்கறியில் நெளிந்த புழு.. கடைக்காரரின் பேச்சால் ஷாக்கான வாடிக்கையாளர்.. புதுவையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி அருகே முள்ளோடை-மதிகிருஷ்ணாபுரம் சாலையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன் தினம் காலை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கிச் சென்றார்.

அதனை சமைக்க எத்தனித்த போது, இறைச்சியில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடமே கொண்டு சென்று காண்பித்து நியாயம் கேட்டார்.

கோழிக்கறியில் நெளிந்த புழு.. கடைக்காரரின் பேச்சால் ஷாக்கான வாடிக்கையாளர்.. புதுவையில் பரபரப்பு!

அதற்கு, கடைக்காரர், இதுவரை யாரும் எங்களிடம் வந்து புகார் கூறவில்லை. உங்கள் பணத்தை வேண்டுமானால் திருப்பி வாங்கி கொள்ளுங்கள் என கூறிவிட்டார். இதுபற்றி, பாதிக்கப்பட்ட நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories