இந்தியா

காத்துவாக்குல 3 காதல்.. 6 பிள்ளைகள் முன்னிலையில் 3 காதலிகளை திருமணம் செய்த காதலன்; ம.பியில் ருசிகரம்!

15 ஆண்டுகளாக 3 பெண்களைக் காதலித்து அவர்களுடன் வாழ்ந்த வந்த காதலன் தனது 6 பிள்ளைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

காத்துவாக்குல 3 காதல்.. 
6 பிள்ளைகள் முன்னிலையில் 3 காதலிகளை திருமணம் செய்த காதலன்; ம.பியில் ருசிகரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் நான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சமர்த் மௌரியா. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர் மூன்று பெண்களைக் காதலித்துள்ளார். பிறகு இவர்கள் மூன்று பேருடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்ததை அடுத்து, மூன்று காதலிகளுக்கு தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்து அனைவரையும் நன்கு கவனித்து வந்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளாமலே மூன்று பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்ததால் இவர்களின் சமூக வழக்கப்படி குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று காதலிகளையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்ய முடிவு செய்து இதற்காக கல்யாண பத்திரிகையும் அடித்து ஊர் முழுவதும் கொடுத்துள்ளார்.

பின்னர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நாளில் 6 பிள்ளைகள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் மூன்று காதலிகளையும் திருமணம் செய்துள்ளார் சமர்த் மௌரியா. பிறகு இந்த தம்பதிகளை உறவினர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories