இந்தியா

திருமணமான 3வது நாளே ரூ.4.39 லட்சம் மதிப்பிலான நகையுடன் தப்பி ஓடிய மணப்பெண் : விசாரணையில் பகீர்!

திருமணமான 3வது நாளே மணப்பெண் நகை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டுத் தலைமறைவான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

திருமணமான 3வது நாளே ரூ.4.39 லட்சம் மதிப்பிலான நகையுடன் தப்பி ஓடிய மணப்பெண் : விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜாதவ். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயதில் ஒரு மகன் உள்ளார். இவருக்குத் திருமணம் செய்வதற்காக ராஜேஷ் வரன் தேடிவந்துள்ளார். ஆனால் அவருக்குப் பெண் கொடுக்க பலரும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கமலேஷ் கதம் என்ற திருமண புரோக்கர் ஒருவர் ராஜேஷ்க்கு அறிமுகமாகியுள்ளார். இவர் மூலம் கமலேஷ் ஆஷா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்தப் பெண்ணும் ராஜேஷின் மகனைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 29ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து திருமணத்தை பதிவு செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அப்போது ரூ.1.5 லட்சம் கொடுத்தால்தான் திருமண பதிவின்போது கையெழுத்துப் போட முடியும் என கமலேஷ் ஆஷாவின் அத்தை மனிஷா நிபந்தனை வைத்துள்ளார்.

இதனால்,வேறு வழியின்றி ராஜேஷ் ரூ.40 ஆயிரம் கொடுத்து மீதி பணத்தை பிறகு கொடுப்பதாக மனிஷாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமண பதிவு நடந்துள்ளது. பின்னர் திருமணம் முடிந்து மூன்றுநாள் கழித்து கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு கமலேஷ் ஆஷா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் அவரது தொலைபேசியைத் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. மேலும் வீட்டிலிருந்து ரூ.4.39 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் வேறு ஒரு நம்பரிலிருந்து அவருக்கு போன் செய்துள்ளனர். அப்போது எடுத்துப்பேசிய அவர், "பணத்திற்காகத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது" எனக் கூறியுள்ளார். இது குறித்து ராஜேஷ் ஜாதவ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories