இந்தியா

அமித்ஷாவை எதிர்த்து போராடியவர்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி கொடுத்த போலிஸ்.. புதுவையில் பரபரப்பு!

அமித்ஷாவை எதிர்த்து போராடியவர்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி கொடுத்த போலிஸ்.. புதுவையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்று, கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தவிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலிஸார் இன்று காலை கைது செய்தனர்.

அமித்ஷாவை எதிர்த்து போராடியவர்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி கொடுத்த போலிஸ்.. புதுவையில் பரபரப்பு!

கைது செய்யப்பட்டவர்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தரமற்ற உணவு வழங்கிய போலிஸாரை கண்டித்து அரசியல் கட்சியினர் காவல்நிலையத்தில் போராட்டத்திலேயே ஈடுபட்டனர். இதையடுத்து பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories