இந்தியா

’வரதட்சணை நல்லதா..?’ : கல்லூரி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பிற்போக்குத்தனமான கருத்தால் கனிமொழி MP ஆவேசம்!

வரட்சணையை புனிதப்படுத்தும் விதமாக கல்லூரி பாடநூலில் கருத்துகள் இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

’வரதட்சணை நல்லதா..?’ : கல்லூரி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பிற்போக்குத்தனமான கருத்தால் கனிமொழி MP ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses என்ற பாடநூலில் வரதட்சணையைப் புனிதப்படுத்தும் விதமான கருத்துகள் இடம்பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தப் நூலில், வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகின்றன என்றும் மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையில் மகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியும் என்றும், மகளிர் கல்வியை வரதட்சணைதான் ஊக்குவிக்கிறது என்பது போன்ற அபத்தமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த நூல் பல செவிலியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை டி.கே.இந்திராணி என்பவர் எழுதியுள்ளார். வரதட்சணைக்கு எதிராக தற்போதைய சமூகம் சிறிது முன்னேறிவரும் நிலையில் மீண்டும் இந்நூல் பழையபடி மக்களை இட்டுச் செல்ல வழிவகுக்கும் வகையில் உள்ளது.

இதையடுத்து வரதட்சணையை புனிதப்படுத்தும் இந்த நூலை உடனடியாக கல்லூரி பாடத்தில் இருந்து நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "இந்திய நர்சிங் கவுன்சில் அங்கீகரித்த செவிலியர்களுக்கான பாடநூலில் “அழகற்ற பெண்களுக்கு வரதட்சணையால் திருமணம் நடக்கிறது என்பது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஒன்றிய அரசு இதனை உடனடியாக நீக்கவேண்டும். மேலும் இந்த புத்தகத்தை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories