இந்தியா

“சார் ஸ்கூலுக்கே போக முடியல.. சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க” : காவல்நிலையத்தில் புகார் கொடுத்த 6 வயது சிறுவன்!

பள்ளிக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகக் கூறி 6 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சார் ஸ்கூலுக்கே போக முடியல.. சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க” : காவல்நிலையத்தில் புகார் கொடுத்த 6 வயது சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம், சித்தூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு 6 வயது சிறுவன் தனியாக வந்துள்ளார். இதனால் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த போலிஸார் சிறுவனை இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுவனை அருகே அழைத்து எதற்காக காவல்நிலையம் வந்தாய் என இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கேட்டுள்ளார்.

அப்போது சிறுவன், "என்னுடைய பெயர் கார்த்திக், நான் பள்ளிக்குச் செல்லும்போது எப்போது பார்த்தாலும் டிராஃபிக் ஜாமாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். என்னுடன் வாருங்கள். நான் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

பின்னர் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிறுவனிடம் கூறி காவலர்களுடன் சிறுவனைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சிறுவனுடன் உரையாடிய வீடியோவை காவல் ஆய்வாளர் பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பெரியவர்களே காவல்நிலையம் செல்ல அச்சப்படும்போது துணிச்சலுடன் காவல்நிலையம் சென்று புகார் அளித்த சிறுவன் கார்த்திக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories