இந்தியா

“இது காலா இல்ல.. சாவியா..?’ - போலிஸாரையே அசரவைத்த ROYAL ENFIELD கொள்ளையன்!

சாவியே இல்லாமல் காலாலேயே Enfield Bikes திருடும் கொள்ளையனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“இது காலா இல்ல.. சாவியா..?’ - போலிஸாரையே அசரவைத்த ROYAL ENFIELD கொள்ளையன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், மோரினா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஷ்யாம் குர்ஜார் மற்றும் பஜ்னா குராஜ். இவர்கள் Royal Enfield இரு சக்கர வாகனங்களைக் குறிவைத்துத் திருடி வந்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் இந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் Royal Enfield வாகனத்திற்குச் சந்தையில் அதிக விலை கிடைப்பதால் இந்த பைக்கை குறிவைத்துத் திருடிவந்ததாக போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மேலும் Royal Enfield வாகனத்தை எப்படி திருடினேன் என்பது குறித்து இளைஞர்களில் ஒருவர் போலிஸார் முன்னிலையில் நடித்து காட்டியுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் Royal Enfield இருசக்கர வாகனத்தின் இருக்கையில் அமர்ந்து காலாலேயே லாக்கை எளிதாக உடைத்து வாகனத்தை ஸ்டார் செய்வது போன்று பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories