இந்தியா

காணாமல் போன வாய்பேச முடியாத சிறுவன்.. 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆதார்’ உதவியுடன் மீட்பு : நடந்தது என்ன?

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த எலஹங்காவை சேர்ந்த சிறுவனை 6 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன வாய்பேச முடியாத சிறுவன்.. 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஆதார்’ உதவியுடன் மீட்பு : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த எலஹங்காவை சேர்ந்தவர் பார்வதி. இவரது 9 வயது மகன் பரத் வாய்பேச முடியாத மாற்றுதிறனாளி. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் அங்குள்ள உழவர் சந்தையில் நாள்தோறும் காய்கறி விற்று பிழைப்பு நடத்திகிறார் பார்வதி.

ஒன்பது வயது மகன் அன்றாடம் தனது தாயோடு உழவர் சந்தைக்கு அழைத்து வந்து சென்ற நிலையில், கடந்த 2016ம் ஆண்டு காணாமல் போயிருக்கிறார். அப்பகுதி முழுவதும் தேடி உறவினர் வீடுகள் என எங்கும் காணாததால் எலஹங்கா காவல்நிலையத்தில் புகைரளித்திருந்த நிலையில், வருடங்கள் கடந்த போதும் பரத் கிடைக்கவில்லை.

இதனால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு தள்ளப்பட்ட பார்வதி மன உளைச்சலில் ஆளாகி முடங்கிபோயிருந்தார். போலிஸார் கடத்தல் சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே காணாமல் போனசிறுவன் தனது தாய் பார்வதியை தேடி அலைந்தபோது, சிறுவன் என்பதாலும் வாய் பேசமுடியாததாலும் வரத்தை யாரிடமும் கூறமுடியாமல் அழுதுகொண்டே பசியில் சுற்றியிருக்கிறான். பின்னர் நாக்பூரில் 6 ஆண்டுகளை கடந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையே வாழ்ந்து வந்திருக்கிறார்.

அப்படி ஒருநாள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பரத்தியிடம் பேச்சுக்கொடுத்தபோது, சிறுவயதில் உனக்கும், உனது தாய் ஆதார் கார்டு பதிவு செய்திருந்தால் உனது விழித்திரை ஊடுகதிர் பதிவேற்றியிருப்பார்கள். ஒருவேளை அப்படி எடுத்திருந்தால், அதில் உனது முகவரி வந்துவிடும் என கூறி அவரை மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று விழித்திரையை ஒப்பிட்டு பார்த்ததில் அவர் பெயர் அவரது தாய் பார்வதி, ஊர் கர்நாடக மாநிலம் எலஹங்கா என வந்துவிட்டது.

உடனே அச்சிறுவனை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற அந்த நபர் விட எலஹங்கா காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு சிறுவன் குறித்து விசாரித்தபோது அங்கு அவர் 2016 ஆண்டு காணாமல் போனதாக வழக்கு நுழைவாயில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது தாய் பார்வதியிடம் மகன் கிடைத்துவிட்ட தகவலை கூற ஆனந்ததில் கூச்சலிட்டு கதறி அழுதிருக்கிறார்.

உடனே காவல்துறை உதவி மூலம் நாக்பூர் சென்ற அவர் அச்சிறுவன் தற்போது நன்கு வளர்ந்திருப்பது கண்டு அவரை கட்டித்தழுவி முத்தமிட்டு, காவல்துறையினருக்கும் அவர் மீட்க உதவிய நபர்களுக்கும் நன்றி கூறி எலஹங்கா அழைத்து வந்தார். 6 ஆண்டுகள் தாய் மகன் பேசப்போராட்டம் தற்போது அனைவரது நெஞ்சத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories