இந்தியா

பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கும் ஆம் ஆத்மி.. பா.ஜ.கவுக்கு படுதோல்வி - Exit Poll கணிப்புகளில் தகவல்!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கும் ஆம் ஆத்மி.. பா.ஜ.கவுக்கு படுதோல்வி - Exit Poll கணிப்புகளில் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் பா.ஜ.க - பிஎல்சி கூட்டணியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பு உண்மையானால், டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் முதல் மாநிலமாகப் பஞ்சாப் இருக்கும்.

தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வெறும் 19-31 இடங்களில் மட்டுமே வெல்லும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க 1-4 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories