இந்தியா

“Be Careful.. Live Peaceful” : Hyundai motors - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்! #BeTheBetterGuy

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

“Be Careful.. Live Peaceful” : Hyundai motors - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்! #BeTheBetterGuy
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

“Be Careful.. Live Peaceful” : Hyundai motors - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்! #BeTheBetterGuy

சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

சாலை போக்குவரத்து விதிகளை சரிவரக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

“Be Careful.. Live Peaceful” : Hyundai motors - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்! #BeTheBetterGuy

வாகன ஓட்டிகள் எப்பொழுதும் வாகனங்களை சாலையின் இடது பக்கத்தில் இயக்கவேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.

18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது. அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது பெரும் குற்றம்.

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலது ஓரத்தில் நடந்து செல்லவேண்டும். சாலைகளில் zebra crossing இல் மட்டுமே பாதசாரிகள் சாலையைக் கடக்கவேண்டும். சாலை விதிகளை எப்போதும் மதிப்போம்!

“Be Careful.. Live Peaceful” : Hyundai motors - கலைஞர் செய்திகள் விழிப்புணர்வு பிரசாரம்! #BeTheBetterGuy
banner

Related Stories

Related Stories